/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இறகுபந்து பயிற்றுநர் வீரர்களுக்கு அழைப்பு
/
இறகுபந்து பயிற்றுநர் வீரர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 13, 2025 04:05 AM
திண்டுக்கல் : தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு மையத்தில் இறகுபந்து பயிற்சிக்காக ஒரு பயிற்றுநர் நியமிக்கப்பட உள்ளார்.
இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு ஏப். 20 மாலை 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சியில் சேர்வதற்கான தேர்வு ஏப். 28ல் காலை 7:00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இதில் 12 முதல் 21 வயதுடையவர்கள் பங்கேற்கலாம்.
விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர், விளையாட்டு அரங்கம், தாடிக்கொம்புரோடு, திண்டுக்கல், 74017 03504ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.