ADDED : மே 18, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் 23 வகையான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.ஜூன் 16 முதல் ஆண்களுக்கான அலைபேசி பழுதுநீக்கும் பயிற்சி 30 நாட்கள் நடக்கிறது.
ஜூன் 9 முதல் ஆண்களுக்கான தச்சுவேலை கற்றல் 30 நாள் பயிற்சி துவங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர் 18 -- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விவரங்களுக்கு குருசரண், இயக்குநர், கனரா வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சிறுமலைப் பிரிவு பஸ் ஸ்டாப் அருகில், நத்தம் சாலை, திண்டுக்கல், 94426- 28434, 86106 -60402, 90802 -24511 ல் தொடர்பு கொள்ளலாம்.