/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைப்பு
/
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைப்பு
ADDED : ஜன 11, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிக்கை : பழநி பெரிய கலையம்புத்துாரில் ஜன.16ல் நடக்க உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள்,காளை உரிமையாளர்கள் கேட்கப்பட்ட விபரங்களுடன் ஜன.11 காலை 8:00 மணி முதல் ஜன. 13 மாலை 5.00 மணிக்குள்https://dindigul.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பங்கேற்கும் வீரர்கள் இணையதளத்தில் புகைப்படம், வயது சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். காளைகளுக்கான பதிவுகளையும்https://dindigul.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தகுதி விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச் சீட்டு ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.