/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நுழைவுத்தேர்வு பயிற்சியில் சேர அழைப்பு
/
நுழைவுத்தேர்வு பயிற்சியில் சேர அழைப்பு
ADDED : மார் 25, 2025 04:52 AM
திண்டுக்கல்: அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் சேர ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாட்கோ, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணக்கு பாடங்களில் 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மணலியில் உள்ள பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும், உணவு, 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை அந்நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தை ேர்ந்தவர்கள்www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.