/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்வர் கோப்பை விளையாட்டுக்கு அழைப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 24, 2025 06:29 AM
திண்டுக்கல் : முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் மாவட்டம், மண்டலம், மற்றும் அளவில் நடத்தப்பட உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் , மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு 12 முதல் 19 வயது , கல்லுாரி மாணவர்களுக்கு 17 முதல் 25 , மாறறுத்திறனாளிகள் அனைத்து வயதினர் , பொதுப்பிரிவினர் 15 முதல் 35 வயது வரை கலந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள் https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in ல் முன்பதிவு செய்து அதற்கான ஆவணங்களான ஆதார் ,புகைப்படத்தை ஆகஸ்ட் 16 க்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு ,இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரி அல்லது 74017 03504 ல் அணுகலாம்.