/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஐ.பி.எல்., ரசிகர் பூங்கா
/
திண்டுக்கல்லில் ஐ.பி.எல்., ரசிகர் பூங்கா
ADDED : ஏப் 04, 2025 03:07 AM
திண்டுக்கல்:கிரிக்கெட் ரசிகர்களுக்காக திண்டுக்கல்லிலும் ஐ.பி.எல்., ரசிகர் பூங்கா அமைக்கப்படுகிறது.
ஐ.பி.எல்., 2025 டி 20 கிரிக்கெட் மார்ச் 22ல் தொடங்கியது. மே 25 வரை 10 வாரங்கள் போட்டிகள் நடக்கின்றன. மைதானங்களில் நேரடியாக சென்று போட்டியை பார்த்து ரசிக்க முடியாத ரசிகர்களுக்கு மைதானம் போல் வசதியை ஏற்படுத்தும் முயற்சியாக 2015ல் ஐ.பி.எல்., நிர்வாகம் ரசிகர் பூங்காவை அறிமுகப்படுத்தியது.
ஒவ்வொரு வாரமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த ரசிகர் பூங்கா செயல்படும். இங்கு ராட்சத திரை அமைக்கப்பட்டு போட்டி ஒளிபரப்பப்படும். இத்துடன் மியூசிக், பொழுது போக்கு, சிறுவர்கள் விளையாடுவதற்கான இடம், உணவுக்கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதிக இடங்களில் ரசிகர் பூங்கா அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரையில் மட்டுமே ரசிகர் பூங்கா அமைக்கபட்டு வந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா ஏப்., 5 ,6ல் செயல்பட உள்ளது. இதில் ரசிகர்கள் இலவசமாக கிரிக்கெட் போட்டிகளை காணலாம்.