/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தை பசுமையாக்க 2.20 லட்சம் மரக்கன்று ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுப்பு
/
மாவட்டத்தை பசுமையாக்க 2.20 லட்சம் மரக்கன்று ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுப்பு
மாவட்டத்தை பசுமையாக்க 2.20 லட்சம் மரக்கன்று ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுப்பு
மாவட்டத்தை பசுமையாக்க 2.20 லட்சம் மரக்கன்று ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுப்பு
ADDED : ஜூன் 09, 2025 02:38 AM

திண்டுக்கல் மாவட்டத்தை பசுமையாக்க ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் 2.20 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் 2002- முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு, மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இயக்கம் 2019- ல் ஆண்டு தொடங்க தமிழகம் ,கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை அதிகரிக்க முயன்று வருகிறது. சுற்றுச்சூழலுடன் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
2024ல் தமிழகம் , கர்நாடகாவில் 1.36 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்களை நடவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதன்படி இயக்கத்தின் பெயரில் மாவட்டம் தோறும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மரம் நடும் பணிகளோடு மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் 2.20 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்து பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாய பயிர்களை பாதிக்காத வகையிலும் மரங்களை வழங்குகின்றனர். உதாரணமாக தென்னை மரங்கள் இருந்தால் குறுக்கு வரப்பில் புன்னை மரம், ஓரக்காலில் வேங்கை மரம் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்குவதோடு மரங்களையும் வழங்குகின்றனர்.தற்போது வெயில் தாக்கம் இருந்து வருவதால் ஒட்டன்சத்திரம், புதுச்சத்திரம் அருகே நர்சரி அமைக்கப்பட்டு மரக்கன்றுகளை பராமரித்து வருகின்றனர். செப்டம்பர், அக்டோபரில் மரக்கன்று பணிகள் முழுவீச்சல் நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
குறைந்த விலையில் மரக்கன்று
ரத்தினம், ஒருங்கிணைப்பாளர், காவேரி கூக்குரல் இயக்கம், திண்டுக்கல் : விவசாயிகள் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் குறைந்த விலையில் அதாவது ரூ. 3க்கு வழங்கப்படுகின்றன.செம்மரம், வேங்கை, மஞ்சள், கடம்பு, தேக்கு போன்ற 21 வகை மரங்களை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மண் புத்துயிருக்கு அதிக கவனம்
மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர், காவேரி கூக்குரல் இயக்கம், பழநி : தமிழகம் முழுவதும் வேலை ஆட்கள் இன்றி தரிசாக மாறி வரும் விவசாய நிலங்களில் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மரங்கள் நடுவது நாட்டுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது. மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண் புத்துயிர் பெறுவதற்கு அதிக கவனமும் முதலீடும் அவசியம். இதுதான் உடனடியாக செய்யப்பட வேண்டியது.