/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து பண்டிகைகளில் நன்மை தரும் நவராத்திரி தர்மம் காக்கும் தாயை தரிசனம் கண்டால் போதும்
/
ஹிந்து பண்டிகைகளில் நன்மை தரும் நவராத்திரி தர்மம் காக்கும் தாயை தரிசனம் கண்டால் போதும்
ஹிந்து பண்டிகைகளில் நன்மை தரும் நவராத்திரி தர்மம் காக்கும் தாயை தரிசனம் கண்டால் போதும்
ஹிந்து பண்டிகைகளில் நன்மை தரும் நவராத்திரி தர்மம் காக்கும் தாயை தரிசனம் கண்டால் போதும்
ADDED : செப் 28, 2025 03:16 AM

திண்டுக்கல்: உலகத்தை படைக்க கடவுள் விரும்பியபோது இச்சை என்ற சக்தியும் ஞானசக்தியும் தோன்றின. பின் கிரியா சக்தியினால் கடவுள் உலகை படைத்தார் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகிறது. நவராத்திரி விழாவில் முதல் 3 நாட்கள் விருப்ப வேண்டுதலுக்கும், அடுத்த 3 நாட்கள் அறிவு வேண்டுதலுக்கும், கடைசி 3 நாட்கள் ஆக்கல் செயலுக்காகவும் அம்மனை நோக்கி வழிபடுகிறோம். ஹிந்து பண்டிகைகளில் மிக சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா, மைசூரு, குலசேகரபட்டிணம் ஊர்களில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. அத்தகைய விழாவை திண்டுக்கல் வேதாத்திரி நகர் ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயிலில் பக்தர்களே பொறுப்பேற்று நடத்துவது சிறப்பு. இதுகுறித்து பக்தர்களின் கருத்துகள் இதோ...
துர்க்கைக்கு தனி கோயில் தாமோதரன், நிர்வாக அறங்காவலர், அன்புநெறி டிரஸ்ட்: ' துர்க்கை அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாள். இறுதியாக விஜயதசமி அன்று சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளித்து மனிதன் அறிவில் உயர்வுபெற்று வினைப்பதிவுகளைக் கடந்து தன்னையறியும் நிலையை ஊக்குவிக்கிறாள். அந்நாளே குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் துர்க்கைக்கு என்று தனிக்கோயில் இங்கு மட்டுமே உண்டு. துர்க்கை அம்மன் வடக்கு முகமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சியளிப்பது இந்த கோயிலின் தனிச்சிறப்பு. அதனால் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
ராகு கால வழிபாடால் நன்மை நளினி, செயலாளர், அன்புநெறி டிரஸ்ட்: துர்க்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும். தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும். துர்க்கையை வழிபட எல்லா நாட்களும் சிறந்தது. எனினும் வெள்ளிக்கிழமை. செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை சிறப்பானது. அஷ்டமி திதி துர்க்கை வழிபாட்டுக்கு சிறந்த நாள். வளர்பிறை அஷ்டமி மிக சிறந்ததாகும். அந்த நாள் துர்க்காஸ்டமி எனப்படுகிறது. ராகு பகவான் துர்க்கையை உபாசன தெய்வமாக கொண்டவர். ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுபவர்களுக்கு நன்மை அருள்வார் .
அதர்வண வேதத்தில் தேவர்கள் ரோகிணி, பக்தர்: வெற்றியின் சின்னத்திற்கு துர்க்கையே லட்சனமாகும். இவளே மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி எனும் மூன்று வடிவங்களில் வேராகவும் ஒன்றாகவும் விளங்குபவள். வேதங்களில் துர்க்கா வழிபாடு பலவாறு சிறப்பித்து சொல்லப்பட்டுள்ளது. அதர்வண வேதத்தில் தேவர்கள் , நீங்களே விளக்கினால் தான் நாங்கள் அறிய முடியும் என வேண்டி நிற்க அதற்கு தேவி, நான் பிரம்ம ஸ்வருபினி பிரகருதி புருஷ்ச வடிவாக இப்பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருப்பதும், சுத்த வெளியாக சுத்த சிவமாக இருப்பதும் என்கிறார் . சிவனிடம் சக்தியாகவும், விஷ்ணுவிடம் மகாலட்சுமியாகவும். பிரம்மனிடம் சரஸ்வதியாகவும், அனைத்து தேவர்களிடத்தும் அவர்களின் சக்தியாய் விளங்குபவள் துர்க்கையே.
நாம வேறுபாடு மஞ்சுளா, பக்தர் : துர்க்கை மகாகாலனாகவும், மகாகாளியாகவும், தனித்தனியாகவும் இணைந்தும் அருள்பாலிக்கிறாள். தீமையை அழிப்பதில் வீரத்திருமகளாக துர்க்கை தோற்றம் கொண்டு சம்ஹாரம் செய்கிறாள். துர்க்கா தேவியின் நாமங்கள் புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் பல்வேறாக உள்ளன. துர்க்கை அருள்புரியும் செயல்களினால் பல நாம வேறுபாடு தோன்றியுள்ளது. உதாரணமாக மகிஷனை வதம் செய்ததால் மகிஷசுரமர்த்தினி என்றும், லவணாசூரனை வதம் செய்ய உதவியதால் லவணதுர்க்கை என நாமம் பெறுகிறாள்.
ஜெயம் உண்டாகும் மலர்விழி, முதல்வர்,வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளி : வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளியில் நவராத்திரி விழா மூலம் மாணவர்களுக்கு நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அறியச் செய்ததுடன், அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளிக்கிறது. குழந்தைகளின் வித்தியாரம்ப நாள் விஜயதசமி ஆகும். அந்நாளில் செயற்கரிய செயலை செய்வதன் மூலம் நம் வாழ்வில் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்பதே நம்பிக்கை.