ADDED : செப் 28, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை, காமதேனு சாரிட்டிஸ் இணைந்து 100 மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு மருத்துவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் மருதைகலாம் வரவேற்றார்.திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தொடங்கி வைத்தார். பா.ஜ., சமூக ஊடகப்பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தகிருஷ்ணன், சமூக நலத் துறை ஜான்சி ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஜெயரட்சக ராஜராஜன், அப்துல் கலாம் அறக்கட்டளை மேலாளர் அன்பு இன்னாசி ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளைச்சாமி, சதீஷ்குமார், ஜெயபால் பேசினர். பொறியாளர் சாம்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சுகாதார ஆய்வாளர் முனியப்பன் நன்றி கூறினார்.