/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விழிக்கலாமே உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகள் கணவர்கள் நிதியை முறையாக பயன்படுத்த கண்காணிப்பு அவசியம்
/
விழிக்கலாமே உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகள் கணவர்கள் நிதியை முறையாக பயன்படுத்த கண்காணிப்பு அவசியம்
விழிக்கலாமே உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகள் கணவர்கள் நிதியை முறையாக பயன்படுத்த கண்காணிப்பு அவசியம்
விழிக்கலாமே உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகள் கணவர்கள் நிதியை முறையாக பயன்படுத்த கண்காணிப்பு அவசியம்
ADDED : நவ 05, 2024 05:49 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகள் நிர்வாகத்தில் கணவர்கள் தலையீடு பெண்களின் நிர்வாக திறமையை முடக்கும் விதமாக உள்ளதோடு, உள்ளாட்சி பதவிக்காலம் முடிய இருப்பதால் நிதிகளை முறையாக கையாள்வதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் முதல் ஒன்றிய தலைவராக உள்ள பெண்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பல இடங்களில் பெண் பிரதிநிதிகள் செயல்படவிடாது அவர்களின் கணவன்மார்கள், உறவினர்கள் தலையீடு அதிகம் உள்ளன.இது பெண்களின் நிர்வாகத் திறமையை முடக்கும் விதமாக உள்ளது. பெண் பிரதிநிதிகள் உள்ள இடங்களில் இவர்கள் செயல்படுகிறார்களா,உறவினர்கள் செயல்படுகின்றனரா என்பதை கண்காணித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சிகளில் கணவர்கள், உறவினர்கள் தலையீடால் நிதி ஆதாரங்களை தவறாக பயன்படுத்துதல் போன்றவைகள் நடந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்திற்கும் ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்குநர் தனித்தனியாக சில மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பி உள்ளார். இருந்தும் இதில் முறையான நடவடிக்கை இல்லாததால் உள்ளாட்சிகளில் இது போன்ற போக்கு தொடரதான் செய்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிய உள்ள நிலையில் ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கிய நிதிகளை ஏதேனும் ஒரு செலவு கணக்குகள் காண்பித்து பணமே இல்லாமல் காலி செய்யும் நிலை உள்ளது.இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் , அரசு உள்ளாட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அரசு பணம் தேவையில்லாமல் செலவு செய்யப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
................
கண்காணிக்க வேண்டும்
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு கொடுத்து மக்களால் தேர்ந்தெடுத்து அமர்த்துகின்றனர்.ஆனால் அவர்களை வீட்டிலே முடக்கிவைத்து விட்டு கணவர்களே அலுவலகங்களுக்கு சென்று அரசுதிட்ட பணிகளை முன்னின்று செயல்படுத்துவது, ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் இவர்களே முன்னின்று நடத்துவது நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளே இதற்கு ஒத்துழைப்பு அளிப்பது வேதனையாக உள்ளது. பெண்களின் நிர்வாக திறமையை முடக்கும் விதமான இத்தகைய செயல்களை மாவட்ட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.தனபால், சமூக ஆர்வலர் , வீரசின்னம்பட்டி, நத்தம்.
..................

