/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்பழுது நீக்கும் மின்வாரியத்தில் பணியில் இல்லாத தனிநபர்களை கண்காணியுங்க: விபத்து அபாயம் ஏற்படும் முன் முறைப்படுத்துவது அவசியம்

UPDATED : ஏப் 14, 2025 06:49 AM
ADDED : ஏப் 14, 2025 05:50 AM

கொடைக்கானல்: மின்வாரியத்தில் பணியில் இல்லாத தனிநபர்கள் மின் பழுதுகளை சரி செய்யும் நிலையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மின்வாரியத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதால், துறையில் பணியாற்றும் நபர்களை தவிர்த்து ஆங்காங்கே உள்ள கிராம பகுதிகளில் உள்ள உள்ளூர்வாசிகள் மின் பழுதுகளை சரி செய்யும் நிலை மாவட்டம் முழுவதும் உள்ளது.
குறிப்பாக கிராமம், மலைப் பகுதிகளிலும் இந்நிலை பரவலாக உள்ளது.இவ்வாறாக பணி செய்யும் தனி நபர்களுக்கு வாரியம் எவ்வித அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையே பழுதுகளை சரி செய்யும் உள்ளூர் நபர்கள் இஷ்டம் போல் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் போக்குள்ளது. மேலும், தங்களது அன்றாட வருவாய்க்காக டிரான்ஸ்பார்மர்களை இயக்குவது, மின்கம்பத்தில் ஏறி பழுதுகளை சீர் செய்வது உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத பணிகளில் ஈடுபடுகின்றனர்.சிலர் மின் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும், காயம் அடைவதும் தொடர்கிறது.
இதை நன்கு அறிந்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மாறாக உள்ளூரில் பழுது நீக்கும் இது போன்ற தனி நபர்கள் மின்வாரியத்தில் பணியாற்றுவார்கள் போன்று ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
வாரியத்தில் பணியாளர்களாக இல்லாத இவர்கள் பணி செய்வது சட்டப்படி குற்றம் என்ற நிலையில் பிரச்னை தீர்ந்தால் போதும் என்ற மனநிலையில் அதிகாரிகள் வேறு வழியின்றி அனுமதிக்கின்றனர்.
இதை ஒழுங்குபடுத்தி, மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பட்சத்தில் தனி நபர்களின் இத்தகைய செயல்பாடுகளை தவிர்க்க முடியும்.