/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் 2வது நாளாக கொட்டிய மழை
/
திண்டுக்கல்லில் 2வது நாளாக கொட்டிய மழை
ADDED : செப் 18, 2025 04:43 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 2வது நாளாக நேற்றும் பெய்த மழையால் மதியத்திற்கு மேல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
திண்டுக்கல்லில் சில நாட்களாகவே பகலில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு மேல் மழை பெய்யத்தொடங்கி விடுகிறது. அதேபோல் நேற்று முன்தினம் பெய்த மழையை தொடர்ந்து 2வது நாளாக நேற்று மாலை 4:00 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக விடாது பெய்தது.
அவ்வப்போது பெரும் மழையாக பெய்வதும், தொடர்ந்து துாரல் என இரவு வரை நீடித்தது. காந்திஜி நகர், நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.
திருச்சி ரோடு, மதுரை ரோடு, ஆர்.எம்.காலனி, நேருஜிநகர் ரவுண்டானா, மாநகராட்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி முடித்து வீடு திரும்பிய மாணவர்கள் அவதியடைந்தனர்.
பழநி: பழநியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில் நேற்று மதியம் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெய்க்காரப்பட்டியில் கொழுமம் சாலையில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ரோட்டில் ஓடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.