/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க.,வினர் மனக்கணக்கு போடுவது பலிக்காது
/
தி.மு.க.,வினர் மனக்கணக்கு போடுவது பலிக்காது
ADDED : பிப் 09, 2024 05:05 AM

திண்டுக்கல்: ''தி.மு.க.,வினர் மனக்கணக்கு போடுவது பலிக்காது''என,முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசியதாவது: எம்.பி., தேர்தல் அறிக்கைக்கான கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் மார்ச்.9ல் நடக்கிறது. அதில் பங்கேற்று தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம். தி.மு.க., அரசு தனது 525 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. மாறாக சொத்து, வீட்டு வரி உயர்வு,மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்தடை என மக்களை வதைக்கிறது. மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வும் ஒருபுறம் அதிகரித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில்லை. மாணவர்கள் கல்வி கடன் ரத்து என்ற வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க போவதாக புறப்பட்டு விட்டார். வழக்கம்போல் எம்.பி., தேர்தலிலும் பொய் வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து வெற்றி பெறலாம் என தி.மு.க.,வினர் மனக்கணக்கு போடுவது பலிக்காது. தமிழக முதல்வராக மீண்டும் பழனிசாமியை அரியணை ஏற்றுவதை ஒவ்வொரு தொண்டரும் உறுதியாக கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி உறுதியாகி உள்ளது என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, நடராஜன், பிரேம்குமார், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதிமுருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, மாவட்ட அவை தலைவர் சங்கரநாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இக்பால்,மாவட்ட இணை செயலாளர் திராவிடராணி, துணை செயலாளர் நாகராணி, மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், கவுன்சிலர் பாஸ்கரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜமோகன்,ஒன்றிய செயலாளர்கள் ஒட்டன்சத்திரம் நடராஜ், தொப்பம்பட்டி சண்முகராஜ், குஜிலியம்பாறை மலர்வண்ணன்,முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, மனோகரன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ராஜசேகர்,மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கவுதம் பால்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்தி, மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் நவநீதன், துணை செயலாளர் பிரபு,முன்னாள் ஆவின்சேர்மன் திவான் பாட்சா, ஒன்றிய மீனவரணி துணை செயலாளர் பாலகுரு பங்கேற்றனர்.

