/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தே.ஜ.,கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு நல்லது: ராம சீனிவாசன்
/
தே.ஜ.,கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு நல்லது: ராம சீனிவாசன்
தே.ஜ.,கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு நல்லது: ராம சீனிவாசன்
தே.ஜ.,கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு நல்லது: ராம சீனிவாசன்
ADDED : மார் 18, 2026 05:57 AM
திண்டுக்கல்: ''தே.ஜ., கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு நல்லது. வருவதும் வராததும் அவரது இஷ்டம்'' என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் பா.ம.க., தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே பா.ம.க., உடன் கூட்டணி. அந்தமான், கர்நாடகா, மகாராஷ்டிராவில் தி.மு.க., உள்ளது. அங்கு காங்., தி.மு.க., கூட்டணி வைப்பது இல்லை.
தே.ஜ., கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு நல்லது. தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் ஓரணியில் இணைவோம். வருவதும் வராததும் அவரது இஷ்டம். கீழடியில் 8 இடங்களில் மத்திய அரசு அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு தடுக்கிறது என தி.மு.க.,வினர் கூறினர். ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் போது பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.,விடம் இல்லை.
இந்தியாவில் முதன்மை நாகரீகம் தமிழர்களுடையது என்பதில் பெருமை அடைகிறோம். இதுகுறித்த முழு விபரங்கள் பிரதமர் மோடிக்கு தெரியும். கீழடி அகழாய்வு வந்ததே அ.தி.மு.க., ஆட்சியில் தான். பழனிசாமி முதல்வராக இருந்த போது தான் இதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதை தி.மு.க., மறைத்துள்ளது. கீழடி அகழாய்வுக்கான அங்கீகாரத்தை அ.தி.மு.க.,விற்கு தான் வழங்க வேண்டும் என்றார்.

