ADDED : டிச 08, 2024 05:05 AM

நத்தம் : கோபால்பட்டியில் அ.தி.மு.க., சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை வகித்தார். சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் ஹரிஹரன், ரமேஷ்பாபு , நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, சின்னச்சாமி, செடிப்பட்டி சக்திவேல் கலந்து கொண்டனர்.
நத்தம் : நத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் அசாருதீன்,மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, நகர அவைத்தலைவர் சேக்ஒலி,நகர பொருளாளர் சீனிவாசன்,ஊராட்சி தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ் கலந்துகொண்டனர்.