ADDED : டிச 06, 2025 05:03 AM

திண்டுக்கல்: முன்னாள் முதல்வர் ஜெ., 9 ம் ஆண்டு நினைவு தினம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அனுசரிக்கப்பட்டது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பாக வைக்கப்பட்ட ஜெ., உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
அமைப்புச் செயலாளர் மருதராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, ராஜன், முரளி, சேசு, முகமது இக்பால், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர்கள ஜெயராமன்.
முத்தையா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் பிரேம், மாவட்டகலை பிரிவு செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த நினைவு நாள் அனுசரிப்பில் ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமை வகித்தார்.
மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, குஜிலியம் பாறை மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், நகர செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தனர்.
வேடசந்துார் : வேடசந்துாரில் ஒன்றிய செயலாளர் ஜான்போஸ் தலைமை வகித்தார்.
நகரச் செயலாளர் பாபு சேட், அம்மா பேரவை செயலாளர் பூக்கடை ஆறுமுகம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் பங்கேற்றனர்.

