/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜாக்டோ ஜியோ மறியல்; 950 பேர் கைது
/
ஜாக்டோ ஜியோ மறியல்; 950 பேர் கைது
ADDED : ஜன 31, 2024 06:59 AM

திண்டுக்கல் : பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 950 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை தர வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர்கள் சுகந்தி, ஜோசப் சேவியர், எஜேம்ஸ் தலைமை வகித்தனர். உயர்மட்டக் குழு உறுப்பினர் குன்வர் ஜேஸ்வா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முபாரக் அலி முன்னிலை வகித்தனர்.இதை தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர்., சிலை நோக்கி ஊர்லமாக வந்து ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட 950 பேரை போலீசார் கைது செய்தனர். பிப். 15ல் மாவட்ட அளவில் ஒரு நாள் ஆயத்த போராட்டம், பிப். 26ல் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.