/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறையில் தீபாவளி அங்காடி இன்று முதல் விற்பனை
/
சிறையில் தீபாவளி அங்காடி இன்று முதல் விற்பனை
ADDED : அக் 24, 2024 07:08 AM
திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் சிறை அங்காடி இன்று முதல் திறக்கப்பட்டு சலுகை விலையில் பொது மக்களுக்கு இனிப்பு,காரம் விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சிறை அங்காடி திறக்கப்படுகிறது. இங்கு இனிப்பு,காரம்,எண்ணெய் வகைகள்,போர்வைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மதுரை மத்திய சிறையில் வாழும் கைதிகளால் தயாரிக்கப்பட்டது. வெளியில் விற்கப்படும் இனிப்பு,கார உணவுப்பொருட்களின் விலையை விட இங்கு சலுகை விலையில் விற்கப்படுகிறது. சிறை அங்காடி பயன்பாட்டிலிருக்கும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

