ADDED : டிச 14, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும், ஆர்.டி.இ., நடைமுறைக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் கல்லறைத்தோட்டம் அருகே உண்ணாவிரதம் நடந்தது
. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜோசப் சேவியர், முருகன், முபாரக்அலி, ஜான்பீட்டர், ராஜாக்கிளி , தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் பேசினர். ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முருகானந்தம், ராஜ்குமார், மகாலிங்கம், சுரேஷ்குமார் கலந்துக்கொண்டனர்.

