/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டுக்கடங்காத மதுவிற்பனை; உயிர்பலி கேட்கும் கல்குவாரி செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தொடரும் பாதிப்பு
/
கட்டுக்கடங்காத மதுவிற்பனை; உயிர்பலி கேட்கும் கல்குவாரி செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தொடரும் பாதிப்பு
கட்டுக்கடங்காத மதுவிற்பனை; உயிர்பலி கேட்கும் கல்குவாரி செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தொடரும் பாதிப்பு
கட்டுக்கடங்காத மதுவிற்பனை; உயிர்பலி கேட்கும் கல்குவாரி செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தொடரும் பாதிப்பு
ADDED : டிச 14, 2025 05:22 AM

திண்டுக்கல்: கட்டுக்கடங்காத மதுவிற்பனை,உயிர்பலி கேட்கும் கல்குவாரி என்பன போன்ற பிரச்னைகளால் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள் பாதிக்கின்றனர்.
ரெங்கநாதபுரம், கள்ளிப்பட்டி, முடக்குராஜக்காபட்டி, எஸ்.பெருமாள் கோவில்பட்டி, ரமணமஹரிஷி நகர், அலக்குவார்பட்டி, அழகர்சிங்கம்பட்டி, ராஜாக்காப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி உள்பட 28 சிற்றுார்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் அரசு அலுவலங்கள், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் என மாவட்டத்தின் மிக முக்கிய நிர்வாக அலுவலகங்கள் உள்ளன.
கரூர், பழநி, திருச்சி என நாலாபுறங்களிலும் நெடுஞ்சாலை வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள பகுதி இந்த ஊராட்சி. இங்கு தெரு விளக்குகள் இல்லை. எப்போதும் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு துணை போகிறது. இதனால் தொற்று நோய்களும் அதிகளவில் பரவுகின்றன.மழை நேரங்களில் மழைநீர் கழிவுநீரோடு சேர்ந்து ரோட்டில் குளம்போல் ஓடுகிறது.
மின் பாதை, பொது இட ஆக்கிரமிப்பு, குளங்களை துார்வாருதல், நுாலகம், மோசமான சாலை என அடிப்படை வசதி குறைபாட்டால் மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
முடித்துத்தர மனமில்லை செல்வநாயகம், முன்னாள் கவுன்சிலர்: அதிகாரிகள், அரசு அலுவலகங்கள், வி.ஐ.பி.,க்கள் என முக்கியஸ்தர்கள் வசிக்கும் பகுதி பளபளவென்று இருக்கிறது. சாதாரண மக்கள், ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் ஆண்டுகள் கடந்தும் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. சாலைகள் பல இடங்களில் பெயர்ந்துள்ளது. அதை சரிசெய்ய ஆளில்லை. இதுகுறித்து மனு கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை. நிதி ஒதுக்கிய சாலைப்பணிகளைக்கூட முடித்துத்தர மனமில்லை. குளங்கள் துார்வாரப்படவில்லை. நீர்நிலைகள், குட்டைகள், குளங்கள் கைவிடப்பட்டுள்ளன. மின் வசதி குறைபாடு, தெருவிளக்கு வசதி இல்லாத இடங்களில் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய மக்கள் போராடுகிறார்கள்.
தேவை பாதுகாப்பு வேலி பாலமுருகன்: கள்ளிப்பட்டி, அலுக்குவார்ப்பட்டி ஊர்களில் வினியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. குடிநீரை விலைக்கொடுத்தே வாங்கி பயன்படுத்தவேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி பகுதி முழுவதும் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. அதிகாரிகளும், போலீசும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். செட்டிநாயக்கன்பட்டியில் பள்ளிக்கூடம் அருகே கைவிடப்பட்ட கல்குவாரி குளம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மாணவர்கள் குறுக்குப்பாதையாக இந்த குளத்தின் வழி பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்களின் உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கவேண்டும் என்றார்.

