/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜாக்டோ -ஜியோ உண்ணாவிரத போராட்டம்
/
ஜாக்டோ -ஜியோ உண்ணாவிரத போராட்டம்
ADDED : மார் 24, 2025 05:32 AM

திண்டுக்கல்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திண்டுக்கல் - திருச்சி ரோடு கல்லறைத்தோட்டம் பகுதியில் நடந்தது.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்தர், முருகன், ராஜாக்கிளி, ஜோசப் சேவியர், முபாரக் அலி,ஜெசி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலர் மயில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட், உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.