/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உரிமையாளர் கண் முன்பே கிணற்றில் விழுந்து இறந்த ஜல்லிக்கட்டு காளை
/
உரிமையாளர் கண் முன்பே கிணற்றில் விழுந்து இறந்த ஜல்லிக்கட்டு காளை
உரிமையாளர் கண் முன்பே கிணற்றில் விழுந்து இறந்த ஜல்லிக்கட்டு காளை
உரிமையாளர் கண் முன்பே கிணற்றில் விழுந்து இறந்த ஜல்லிக்கட்டு காளை
ADDED : பிப் 21, 2024 05:51 AM
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே தவசிமடை ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை கிணற்றில் தவறி விழுந்து உரிமையாளர் கண் முன்னே இறந்தது.
சாணார்பட்டி அருகே தவசிமடையில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதுரை அண்டாம்பட்டியைச் சேர்ந்த வினோத் என்பவரின் காளை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய காளை அந்த பகுதியில் உள்ள தோட்டத்துப் பகுதிகளுக்குள் சென்றது. மாட்டின் உரிமையாளர் காளையை பல்வேறு இடங்களில் தேடினர்.இந்த நிலையில் நேற்று வேலம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்து பகுதியில் காளை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்த உரிமையாளர் வினோத் அவரது துண்டை அசைத்து கூப்பிட்டார். எஜமானை கண்டு துள்ளிக்குதித்து ஓடி வந்த காளை 80 அடி ஆழம் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. திண்டுக்கல் தீயணைப்பு மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் காளையை இறந்த நிலையில் மீட்டனர்.