/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு
/
நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு
ADDED : பிப் 13, 2024 06:30 AM
திண்டுக்கல், ; திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி நடந்த ஜல்லிக்கட்டில் 700 க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில் வாடிவாசலில சீறிப்பாய்ந்து காளை இறந்தது.
திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் நடந்தது.
திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 784 காளைகள் பங்கேற்றன. 300க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
20 மாடுபிடி வீரர்கள், 17 காளை உரிமையாளர்கள், 8 பார்வையாளர்கள் என 45 பேர் காயமடைந்தனர். வெற்றிப் பெற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.