நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்; வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகாக்களில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கிராமம் வாரியாக தாலுகா அலுவலகங்களில் மே 22 முதல் 27 வரை காலை 10:30 மணி முதல் நடக்க உள்ளன.
மக்கள் பட்டா, சிட்டா, பெயர் மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட வருவாய் ஆவண தேவைகளுக்கு கோரிக்கை மனு அளித்து பயன் பெறலாம் என வேடசந்தூர் தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் தெரிவித்துள்ளார்.