/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் ஜப்பான் பக்தர்கள்
/
பழநி முருகன் கோயிலில் ஜப்பான் பக்தர்கள்
ADDED : ஆக 10, 2025 01:45 AM

பழநி:பழநி முருகன் கோயிலில் வேல், பால்குடம் எடுத்து ஜப்பான் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நேற்று ஜப்பானை சேர்ந்த சிவ ஆதினம் பாலகும்பகுருமுனி தலைமையில் புலிப்பாணி ஆசிரமத்திற்கு ஜப்பான் பக்தர்கள் வந்தனர். அங்கு சிறப்பு யாகம் செய்தனர்.
அங்கு சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் இவர்களுக்கு வேல் கொடுத்து தீர்த்த யாத்திரையை துவக்கி வைத்தார். அங்கிருந்து பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வேல், பால்குடம் எடுத்து சென்றனர். அங்கிருந்து கிரி வீதியில் தீர்த்தக்காவடிகளுடன் வலம் வந்தனர். திருஆவினன்குடியில் சிறப்பு பால் அபிஷேகம் நடத்தி மலைக்கோயிலுக்கு படி வழியாக சென்று தரிசனம் செய்தனர்.