/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த மல்லிகை பூ
/
வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த மல்லிகை பூ
ADDED : ஏப் 12, 2025 05:55 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் பூ மார்கெட்டில் வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூ ரூ.600க்கு விற்பனையானது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விற்பனைக்காக திண்டுக்கல் பூ மார்கெட்டிற்கு வழக்கத்தை விட அதிக அளவில் விவசாயிகள் பூக்களை கொண்டு வந்தனர்.
இதனால், வரத்து அதிகமாகி நேற்று முன்தினம் ரூ. 1000 விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ. 600 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் முல்லை ரூ.800, ஜாதிப்பூ ரூ.800, கனகாம்பரம் ரூ.700, காக்கரட்டான் ரூ.600, பட்டன் ரோஜா ரூ.230, அரளிப்பூ ரூ. 350, சம்பங்கி ரூ. 200, செவ்வந்திப்பூ ரூ. 200, பன்னீர் ரோஜா ரூ. 150 என விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.