ADDED : டிச 07, 2025 05:51 AM

கோபால்பட்டி: -கோபால்பட்டியில் சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க., சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், ஒன்றிய செயலாளர் ராமராசு தலைமையில் ஜெ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், ஜெ.பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இளம்வழுதி,ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் எம். ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், சேகர், வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன், ஒன்றிய பொருளாளர் ரமேஷ் பாபு, எம்.ஜி.ஆர்., அணி இணைச் செயலாளர்கள் செல்வம், சக்திவேல் கலந்து கொண்டனர்.
சின்னாளபட்டி: ஆத்துார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் என்.பஞ்சம்பட்டியில் ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.
கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அருளானந்தம், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சேசு ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய நிர்வாகி ஹரிஸ் வானவன், சேடபட்டி பஸ் ஸ்டாண்டில் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி தலைமையில் மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் முகமது ஹாஜியார், மாவட்ட பிரதி ரமேஷ் குமார்.
ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தர்மத்துப்பட்டி, கரிசல்பட்டி, கன்னிவாடி, செம்மடைப்பட்டி, மூலச்சத்திரம், நடுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமையில்ஜெயலலிதா படத்திற்கு மலர்துாவி மரியதை செலுத்தினர். மவுன ஊர்வலம் நடந்தது.

