நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டை, அம்மையநாயக்கனுார் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் தனியே நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்க செயினை சிலர் பறித்து சென்றனர்.
இதே போல் அம்மைய நாயக்கனுார் பகுதியில் சோப்பு கம்பெனி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை சம்பவம் நடந்தது. தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சி பதிவுப்படி கொள்ளையர்களை தேடினர்.
கோவை மேட்டுப் பாளையத்தில் பதுங்கியிருந்த ஜனாபுல்லாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

