/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., நிர்வாகி வீட்டில் நகை, பணம் கொள்ளை
/
தி.மு.க., நிர்வாகி வீட்டில் நகை, பணம் கொள்ளை
ADDED : ஏப் 25, 2025 02:13 AM
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தி.மு.க., கிளை அவைத் தலைவர் வடிவேல் 51, வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.
வடமதுரை அருகே வேல்வார்கோட்டை வெள்ளபொம்மன்பட்டியைச் சேர்ந்த தி.மு.க., கிளை அவைத் தலைவர் வடிவேல். இவருக்கு சீலப்பாடியன்களம் ரோட்டில் இரண்டு வீடுகள் உள்ளன. ஆஸ்பெஸ்ட்டாஸ் வீட்டில் சமையல் செய்வதும், மற்றொரு வீட்டில் இவரும், குடும்பத்தினரும் துாங்குவதும் வழக்கம்.
நேற்றுமுன்தினம் இரவு ஆஸ்பெஸ்ட்டாஸ் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்புகுந்த மர்மநபர்கள் இரு வேறு அறைகளில் இருந்த பீரோக்களை உடைத்து ஒரு பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வடிவேல் புகாரின்படி வடமதுரை போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.