/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: துப்பாக்கியுடன் ஒருவர் கைது
/
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: துப்பாக்கியுடன் ஒருவர் கைது
ADDED : மே 02, 2025 06:48 AM

வேடசந்தூர்: வேடசந்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்துச் சென்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடம் துப்பாக்கியை ஒன்றை பறிமுதல் செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
வேடசந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகேசன் மனைவி கோமதி 40. இவர் வேடசந்தூர் போஸ்ட் ஆபீஸ் வந்துவிட்டு மீண்டும் வீடு நோக்கி வந்தபோது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து சென்றனர்.
கோவிலூர் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய வேடசந்தூர் உசிலம்பட்டியை சேர்ந்த கார்த்தி 35 என்வரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் கோவையில் தனியார் உணவு விநியோக கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், உடன் வேலை பார்க்கும் கோவை அபினேஷ் குமார் 26 என்பவருடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
5 பவுன் நகையை மீட்ட கார்த்தியின் டூவீலரை சோதனையிட்டபோது அனுமதி இல்லாத நாட்டு கை துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்து வேடசந்துார் போலீசார் கூட்டாளி அபினேஷ் குமாரை தேடி வருகின்றனர்.