/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பணி வாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
/
பணி வாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
ADDED : அக் 31, 2025 02:02 AM

ஒட்டன்சத்திரம்:  ஒட்டன்சத்திரத்தில் பணிவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது.
அக்ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த முகாமில் ஆன்லைன் ஆலோசகர்,  பணி வாய்ப்பு வல்லுநர் ஜெயபிரகாஷ் காந்தி நுழைவுத் தேர்வுகள், கல்விக் கொள்கை மாற்றங்கள், உயர்கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை சிக்கல்கள், பொறியியல் மருத்துவம், வணிகம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் புதிய தொழில் முறைகளை பற்றியும் அவற்றிற்கான கல்வி நிலைகள் குறித்தும் மாணவர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் பயிற்சி மூலம் விளக்கினார்.
இப் பயிற்சி அரங்கத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் பழநி பள்ளிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சந்தேகங்களையும் கேள்வி களையும் நேரடி உரையாடல் மூலம் கேட்டறிந்தனர்.
தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன் ஆலோசகருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர். முதல்வர் சவும்யா வாழ்த்தி பேசினார்.

