ADDED : ஜூலை 14, 2026 04:56 AM

அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயில் தலைமை நிர்வாகியாக இணை கமிஷனர் செயல்படுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இணை கமிஷனராக இருந்த மாரிமுத்து பதவி உயர்வு பெற்று கூடுதல் ஆணையராக சென்னைக்கு மாறுதல் ஆனார்.
இதையடுத்து கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ் முழு கூடுதல் பொறுப்பு இணை கமிஷனராக பணிநியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
