ADDED : ஆக 10, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குநராக சுபாஷினி நேற்று பொறுப்பேற்றார்.
இங்கிருந்த முனுசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் நாகப்பட்டினம் சி.இ.ஓ., சுபாஷினி பதவி உயர்வு பெற்று இங்கு பொறுப்பேற்றார். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படும் இத்துறை பள்ளிகள், மாணவர் விடுதிகள் இவரது கட்டுப்பாட்டிற்குட்பட்டது.