/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எங்கும் ஜோர்: அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்: வழங்காவிடில் அலைக்கழிக்கப்படும் மக்கள்
/
எங்கும் ஜோர்: அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்: வழங்காவிடில் அலைக்கழிக்கப்படும் மக்கள்
எங்கும் ஜோர்: அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்: வழங்காவிடில் அலைக்கழிக்கப்படும் மக்கள்
எங்கும் ஜோர்: அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்: வழங்காவிடில் அலைக்கழிக்கப்படும் மக்கள்
ADDED : செப் 24, 2024 05:23 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலங்களில் தலை விரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு செல்லும் மக்கள் ஆவணங்கள், கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளை அணுகும் நிலையில் பகிரங்கமாக லஞ்சங்கள் கேட்கப்படும் சூழலை காண முடிகிறது. தற்போதைய இந்த சூழலால் ஏழை மக்கள் லஞ்சம் கொடுக்க மறுக்கும் நிலையில் அலைக்கழிக்கபடுகின்றனர். இலை மறை காயாக லஞ்சம் பெற்ற நிலை மாறி தற்போது பகிரங்கமாக புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெறும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. கொடைக்கானல் மலைப் பகுதியை பொருத்தமட்டில் அதிகாரிகள் லஞ்சத்தில் நனைந்துள்ளனர். இதை கண்காணிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை கண்டும் காணாமல் உள்ளனர் . பொது மக்களின் அன்றாட தேவை, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள் லஞ்சங்களில் நனைந்து வளம் கொழிக்கின்றனர். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் கண்டிப்பு காட்ட வேண்டும். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையின் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் இடம் பெற செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
...............
தேவை தனிக்குழு
அரசு அலுவலகங்களில் பெருகி உள்ள லஞ்சத்தால் பொதுமக்கள் ஏழை , எளிய, நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகளின் செயல்களை தடுக்க அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அலைபேசி எண்களை காண முடியவதில்லை . இதை மக்கள் அறியும் வகையில் நுழைவுவாயிலில் இடம்பெற செய்ய வேண்டும். லடு்சம் வாங்கும் அதிகாரிகளின் செயல்களை கண்கானிக்க மாவட்டத்தில் தனிக் குழு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோகன், பாரதிய கிசான் சங்க மாநில செயலாளர் , கொடைக்கானல் .
............