/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் குறைகளை கேட்பதில் ஆர்வம் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி பேச்சு
/
மக்கள் குறைகளை கேட்பதில் ஆர்வம் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி பேச்சு
மக்கள் குறைகளை கேட்பதில் ஆர்வம் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி பேச்சு
மக்கள் குறைகளை கேட்பதில் ஆர்வம் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி பேச்சு
ADDED : டிச 14, 2025 05:20 AM

நத்தம்: ''மக்களை சந்தித்து குறைகளை கேட்பதில் எங்களை போன்ற நீதிபதிகளுக்கு ஆர்வமாக இருக்கிறது,''என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தண்டபாணி பேசினார்.
நத்தம் நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டபணிகள் குழு சார்பாக நடந்த மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற அவர் வாகன விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.23 லட்சத்திற்கான காசோலையை, செக்மோசடி வழக்கில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இதை தொடர்ந்து அவர் பேசியதாவது: மக்களை சந்தித்து அவர்களை குறைகளை கேட்பதில் எங்களை போன்ற நீதிபதிகளுக்கு ஆர்வமாக இருக்கிறது. இந்த காலத்திலும் தாலுகா அலுவலகத்தில் ஏழை, எளிய மக்கள் அடிக்கடி அலைந்து செல்ல வேண்டிய சூழ்நிலை , பணக்காரர்கள் போனிலே சாதிக்கும் நிலையே உள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நானும், அவர்கள் கொடுக்கும் பணத்தில் வழக்காடும் வழக்கறிஞர்களும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்ற புறக்கணிப்பை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றார். மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா, நத்தம் நீதிபதி ஆப்ரினாபேகம், அரசு வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, அமர்ஜோதி, நத்தம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

