/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டிகள்: பிரஸித்தி அணி வெற்றி
/
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டிகள்: பிரஸித்தி அணி வெற்றி
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டிகள்: பிரஸித்தி அணி வெற்றி
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டிகள்: பிரஸித்தி அணி வெற்றி
ADDED : டிச 31, 2024 05:03 AM
திண்டுக்கல்: ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் கோப்பைக்கான பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் பிரஸித்தி அணி வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் கோப்பைக்கான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள் கடந்த மதுரை, சிவகங்கையில் டிச.26ல் தொடங்கியது. திண்டுக்கல்லில் நடக்கும் போட்டிகள் நேற்று முன்தினம் என்.பி.ஆர்., மைதானத்தில் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா பள்ளி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
ஆர்யன்கட்கார் 51, ஹேமந்த் 42 ரன், கார்த்திக் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா சி.பி.எஸ்.இ., அணி 17 ஓவர்களில் 47 ரன்களில் ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது. ஸ்ரீஹரி 5 விக்கெட் எடுத்தார். மற்றொரு போட்டியில், திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., பள்ளி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.
கெவின்ரோகித் 52, முகமதுஅஸ்வாக் 59 ரன் எடுத்தனர். சேசிங் செய்த செட்டிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஹர்சன் 3 விக்கெட் எடுத்தார். நேற்று நடந்த அரையிறுதி முதல் போட்டியில் திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ஸ்ரீஹரி 50, தஷ்வின் 58 ரன், கன்வால்கிஷோர் 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., பள்ளி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மற்றொரு அரையிறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மதுரை கிரேஸ் பள்ளி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது. ஞானவிஷால் 35 ரன், கவுதம்பாலாஜி 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த சிவகங்கை செல்லப்பன் வித்யாமந்திர் அணி 15.5 ஓவர்களில் 62 ரன்களில் ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது. ஜனேஷ் 4 விக்கெட் எடுத்தார்.