/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இன்ஸ்டாகிராமில் காதல் கல்லுாரி மாணவி கடத்தல்
/
இன்ஸ்டாகிராமில் காதல் கல்லுாரி மாணவி கடத்தல்
ADDED : மார் 02, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கல்லுாரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.
திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவியிடம் வடமதுரை மோர்பட்டி பகுதியைச் சேர்ந்த மதன் நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்தார். இது காதலாக மாறியது.
இது மாணவி வீட்டில் தெரியவர பெற்றோர் அறிவுரை வழங்கினர். இதனிடையே நேற்று முன்தினம் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார்.
திண்டுக்கல் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

