ADDED : மே 03, 2025 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அருகே கல்வேலிபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் மேளதாளம் முழங்க வாணவேடிக்கைகளுடன் அம்மன் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு, கரும்பு தொட்டில்,முளைப்பாரி,கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
நேற்று மாலை பக்தர்கள் புடைசூழ தீவட்டி பரிவாரங்களுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.