/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம்: சூரர்கள் தயார்
/
கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம்: சூரர்கள் தயார்
ADDED : அக் 26, 2025 06:24 AM

பழநி: பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சூரன்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக். 22 முதல் நடைபெற்று வருகிறது. நாளை (அக்.27) முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
பழநி வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் என நான்கு சூரன்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.
இதற்கான உருவ பொம்மைகள் பெரியநாயகி அம்மன் கோயிலில் செய்யப்பட்டு வருகிறது
சூரன்களின் ஆயுதங்கள், கம்பீர உடல் அமைப்பு ஆகியவை வண்ண காகிதங்கள் மூலம் அலங்கரித்து வருகின்றனர். மேலும் சூரர்களின் தலைகளை பிரத்தியேகமாக தயார் செய்து இன்று சிறப்பு பூஜைகள் செய்து சூரர்கள் உடல்களுடன் பொருத்த உள்ளனர். நாளை (அக் 27) காலை தயாரான சூரன்கள், சூரசம்ஹாரம் நடக்கும் கிரிவீதிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

