/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் துவங்கியது கந்தசஷ்டி விழா
/
முருகன் கோயில்களில் துவங்கியது கந்தசஷ்டி விழா
ADDED : நவ 03, 2024 05:27 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவங்கியதை தொடர்ந்து சிறப்பு வழிபாடு, சுவாமி புறப்பாடு, சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடந்தது.
பக்தர்களும் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் முருகன் சன்னதியில் காலை 7:00 மணிக்கு யாக பூஜையோடு கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து சக்தி வேலனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி,- தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் ,நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
பின்னர் தீபாராதனை காட்ட பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
என்.ஜி.ஓ.,காலனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை யொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து முருகன் சன்னதியிலிருந்து எடுத்தவரப்பட்ட திருக்கொடி கோயிலில் அனைத்து சுவாமி சன்னதிகளை சுற்றி வர மேளதாளம் முழங்க பக்தர்களின் முருககோஷத்துடன் கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி கோயில், கந்தகோட்டம் முருகன் கோயில், பாதாள செம்பு முருகன் என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடங்க பக்தர்களும் விரத்தை துவக்கினர்.
சின்னாளபட்டி : சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று
கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரக ஹோமம், மகா கணபதி அபிஷேகத்துடன் முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. வேதிகார்ச்சனை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடந்தது. மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. ரெட்டியார்சத்திரம் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் சஷ்டி விழா நேற்று துவங்கியது. கணபதி பூஜை, மூலவருக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர், கருங்காலி மாலை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.--
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், கோமாதா பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.
முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.