/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்ணடியப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
/
கண்ணடியப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மார் 08, 2024 01:39 AM

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் வரதமா நதி அருகே உள்ள கண்ணடியப் பெருமாள் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா பிப்.26ல் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 6 ல் கணபதி பூஜை உடன் சுதர்சன ஹோமம் துவங்கியது. முதற்கால யாக பூஜை, மார்ச் 7 ல் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. அதன் பின் விநாயகர், விலங்கடியான், ஆஞ்சநேயர் கருப்புசாமி நாககன்னி கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.
அன்னதானம் நடைபெற்றது. செயல் அலுவலர் ராமநாதன், பெருமாள் பிள்ளை சன்ஸ், ஆனந்த், பரணி ப்ரூட்ஸ் உரிமையாளர் போஸ்ராஜன், சிவகலை கலந்து கொண்டனர்.

