/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார்த்திகை, வரத்து அதிகரிப்பால் கறிக்கோழி விலை வீழ்ச்சி
/
கார்த்திகை, வரத்து அதிகரிப்பால் கறிக்கோழி விலை வீழ்ச்சி
கார்த்திகை, வரத்து அதிகரிப்பால் கறிக்கோழி விலை வீழ்ச்சி
கார்த்திகை, வரத்து அதிகரிப்பால் கறிக்கோழி விலை வீழ்ச்சி
ADDED : நவ 28, 2024 06:19 AM
திண்டுக்கல்: கார்த்திகை மாதம், தேவைக்கு அதிகமான வரத்து போன்ற காரணங்களால் கறிக்கோழி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்குவதற்கு முன்பே கோழி உற்பத்தி வழக்கமாக குறைக்கப்படும். புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதாலும், அடுத்த ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் தொடங்கி விட்டால் இறைச்சி விற்பனை குறையும் என்பதாலும் உற்பத்தி அளவுகள் குறைக்கப்படும்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை விவசாயிகள் அதிகளவில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வரத்து அதிகமாக இதன் விலை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையான கறிக்கோழி தற்போது ரூ.140 முதல் ரூ.160 க்கு விற்பனையாகிறது.
இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பண்ணை வைத்திருப்போர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியாபாரிகள் கூறியதாவது : புரட்டாசி மாதம் தான் வழக்கமாக விற்பனை மந்தமாக இருக்கும். வழக்கமாக சப்ளை செய்யும் நிறுவனங்கள் தான் உற்பத்தி செய்வர். ஆனால் சமீபகலமாக விவசாயிகள் அதிகளவில் கோழி உற்பத்தியில் ஈடுடுள்ளனர். இதனை வரையறை செய்ய முடியாது. இதன் வரத்து அதிகரிக்க அதே நேரத்தில் கார்த்திகை மாதம் தொடங்கியதால் விலை வீழச்சியடைந்துள்ளது. எடுத்துகாட்டாக திண்டுக்கல் மாவட்டத்தில் தினம் 10 ஆயிரம் கோழிகள் விற்பனையாவது வழக்கம். ஆனால் தற்போது 3 ல் ஒரு பங்குதான் விற்பனையாகிறது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. விலை குறைந்தால் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றமே உள்ளது.
தீவனங்கள் தொடங்கி, மருந்து, போக்குவரத்து செலவு என அனைத்தும் உயர்ந்துள்ளதால் கிலோ ரூ.220 க்கு விற்றால் மட்டுமே குறைந்தபட்ச லாபத்தை பார்க்க முடியும். ரூ.160க்கு விற்பது நஷ்டம் தான் என்றனர்.