sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி முருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு

/

 பழநி முருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு

 பழநி முருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு

 பழநி முருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு


ADDED : பிப் 24, 2026 06:06 AM

Google News

ADDED : பிப் 24, 2026 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயிலில் மாசி மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்க மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜையில் நடைபெற்றது.

உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், வின்ச் மூலம் கோயில் சென்றனர்.

பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் வழியாக பக்தர்கள் கோயில் செல்ல படிப்பாதையில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். கோயில் சார்பில் இலவச பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை நேரத்தில் விளக்கு பூஜை திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us