/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் கார்த்திகை சிறப்பு பூஜை
/
பழநியில் கார்த்திகை சிறப்பு பூஜை
ADDED : மார் 16, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியில் மாத கார்த்திகையை முன்னிட்டு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
பழநி முருகன் கோயிலில் பங்குனி கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதோடு திருவிளக்கு பூஜை, தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடைபெற்றது. கார்த்திகை நட்சத்திர நாளில் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். திரு ஆவினன்குடி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடந்தது. சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

