/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
/
கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜூன் 04, 2025 01:06 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 102வது பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது.
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி என்ற முழக்கங்களோடு ஊர்வலம் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை வகித்தார். மேயர் இளமதி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் இந்திராணி, தொண்டரணி அமைப்பாளர் அருள்வாணி முன்னிலை வகித்தனர். தி.மு.க., அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. துணைமேயர் ராஜப்பா, மாவட்ட துணை செயலர்கள் மார்கிரெட்மேரி, பிலால், அவைத்தலைவர் காமாட்சி, பொருளாளர் சத்தியமூர்த்தி, நகர பொருளாளர் சரவணன் பங்கேற்றனர். தொடர்ந்து, நத்தம் ரோடு தனியார் மகாலில் ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.
ஆதவன் உலக தமிழ் சங்கம் சார்பில் கவியரங்கம் திண்டுக்கல் பழநி ரோடு வாரி பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. சங்க நிறுவனர் மெர்சி செந்தில்குமார் தலைமை வகித்தார். டாக்டர் அமலாதேவி, கவிஞர் குயிலன், பேச்சாளர்கள் ஓவியா, ல்சுபாஷிணி, பாதிரியார் பிலிப்ஸ் சுதாகர், தி.மு.க., மாநகர பொருளாளர் சரவணன், தாய்க்கூடு பவுண்டேசன் குணவதி, சமூக நல்லிணக்க சபை செயலாளர் திர்பூசியஸ் கலந்து கொண்டனர்.
வடமதுரை : நகர தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப்பையன் முன்னிலை வகித்தார். கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி இனிப்பு, அன்னதானம் வழங்கினர். நகர துணை செயலாளர்கள் வீரமணி, அழகுமலை, அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முரளிராஜன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், சவுந்தராஜ், சசிக்குமார் பங்கேற்றனர்.
வேடசந்துார்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் ஆத்து மேட்டில் கருணாநிதியின் படத்திற்கு மலர் துாவி மகிழ்ந்தனர். கொல்லம் பட்டறை பார்வையற்றோர் பள்ளிக்கு சென்ற அவர் 102 பயனாளிகள் உண்ணும் வகையில் இனிப்பு ,உணவு பொட்டலங்களை வழங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, முன்னாள் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, நகர செயலாளர் கார்த்திகேயன், தி.மு.க., நிர்வாகிகள் ரவிசங்கர், கவிதாமுருகன், வீரக்குமார், சுரேஷ், காட்டுபாவா சேட், அன்சர் அலி, சையது இப்ராஹிம், ரியாஜ் பங்கேற்றனர்.
நத்தம் :வத்திபட்டியில் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழா தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமையில் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம்,வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., கொடி ஏற்றி உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அன்னதானம் வழங்கபட்டது. முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சாத்திபவுர்,அழகிநேரு, தேனம்மாள் , வழக்கறிஞர் அணி சுந்தரமூர்த்தி, மாணவரணி சிவா, இளைஞரணி இப்ரில் ஆசித், சுற்றுச்சூழல் அணி ராஜகோபால் கலந்து கொண்டனர். நத்தத்தில் நகர செயலாளர் ராஜ்மோகன் தலைமையிலும், செந்துறையில் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.
சாணார்பட்டி: கோபால்பட்டி, சாணார்பட்டியில் தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கள்ளிமந்தையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் சக்கரபாணி , கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார். ஒட்டன்சத்திரத்தில் நடந்த விழாவில் 1000 பெண்களுக்கு தலா 5 கிலோ அரிசி பைகளை வழங்கினார். ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி,
ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், பாலு, பொன்ராஜ், சுப்பிரமணி, தலைமை செயற்குழு குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.
பழநி :பழநி நகரில் பஸ் ஸ்டாண்ட் அருகே கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் வேலுமணி தலைமை வகித்தார். இதையொட்டி மகளிர் அணியினர் ஊர்வலமாக வந்தனர். நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர்கள் சுரேஷ், செபாஸ்டின், காளீஸ்வரிபாஸ்கரன் கலந்து கொண்டனர். முதியோர் இல்லம்,வீடற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.