/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்பசுவாமி கோயில் விழா 50- ஆடுகளை வெட்டி படையல்

ADDED : ஜூலை 23, 2025 03:02 AM
நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கருப்பசுவாமி கோயில் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி சுவாமிக்கு படையலிட்டு அசைவ விருந்து நடந்தது.
நத்தம் அருகே ஒத்தினிப்பட்டி தெற்கிகாட்டு கருப்பசுவாமி கோயிலில் ஆடி படையல் விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஆடி படையல் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு சுவாமிக்கு இரவு 7:00 மணிக்கு படையலிடப்பட்டது. 40 சிப்பம் அரிசியில் சாதம் தயாரித்து கறிக்குழம்புடன் அசைவ விருந்து நடந்தது. சுற்றியுள்ள கிராம ஆண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒத்தினிப்பட்டி, பஞ்சயம்பட்டி, லட்சுமணபுரம், ஒ.புதுார் கிராமத்தினர் செய்தனர்.