/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி அடிவாரத்தில் கடை அடைப்பு கடைகளில் கருப்புக்கொடி
/
பழநி அடிவாரத்தில் கடை அடைப்பு கடைகளில் கருப்புக்கொடி
பழநி அடிவாரத்தில் கடை அடைப்பு கடைகளில் கருப்புக்கொடி
பழநி அடிவாரத்தில் கடை அடைப்பு கடைகளில் கருப்புக்கொடி
ADDED : மார் 08, 2024 01:40 AM

பழநி: பழநி அடிவாரம் கிரிவீதிக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் உரிமை மீட்பு குழுவினர் சார்பில் கடையடைப்பு நடைபெற்றது.கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்பு தொடர்பாக பழநி அடிவாரம் கிரிவீதியை இணைக்கும் முக்கிய சாலைகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்படி கோயில் நிர்வாகம் சார்பில் அடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழநி வாழ் மக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஒரு நாள் கடையடைப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (மார்ச் 7) கிரி வீதி, சன்னிதி வீதி, அய்யம்புள்ளி ரோடு பகுதி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அனைத்து கடைகள் முன்பு கருப்புக்கொடி கட்டி கட்டப்பட்டிருந்தது. பழநி நகரில் உள்ள கடைகள் திறக்கப்பட்டிருந்தன.