/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருப்புசாமி கோயில் தீர்த்த ஊர்வலம்
/
கருப்புசாமி கோயில் தீர்த்த ஊர்வலம்
ADDED : பிப் 05, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் காந்திநகர் மலையாள கருப்புசாமி, மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தீர்த்த ஊர்வலம் நடந்தது.
விழாவையொட்டி நத்தம் காந்திநகர் மக்கள் அழகர் கோயில் மலையிலிருந்து நுாபுர கங்கை தீர்த்தம் எடுத்து வந்து அதை நத்தம் சந்தன கருப்பு கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பக்தர்கள் மேளதாளம் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தன கருப்பு கோயிலிலிருந்து தீர்த்தம் எடுத்து மலையாள கருப்பு கோயிலுக்கு கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

