/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லிங்கேஸ்வரர் கோயிலில் தீர்த்த காவடி
/
லிங்கேஸ்வரர் கோயிலில் தீர்த்த காவடி
ADDED : ஏப் 06, 2025 05:22 AM

வேடசந்துார் : கே.புதுார் சிவகிரி மலையடிவாரத்தில் ஸ்படிக லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலின் 12ம் ஆண்டு தீர்த்த காவடி சங்கமம் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தங்களை கலசங்களில் எடுத்து ஜி.நடுப்பட்டி, சிவகிரியில் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு மலை அடிவாரத்தில் உள்ள ஸ்படிகலிங்கேஸ்வரக்கு தீத்தங்கள் ஊற்ற சிறப்பு அலங்காரம் ,தீபாதாரணை நடந்தது.
தீர்த்த கலசங்கள் சிவகிரி மலையை சுற்றி கிரிவலம் சென்ற நிலையில் மலை மீது உள்ள பஞ்சலிங்கேஸ்வருக்கு பால், தீர்த்த அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளாக மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி வீரகேத்து தலைமையில் பொதுமக்கள் செய்திருந்தனர்.

