ADDED : ஏப் 25, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: கீழகோயில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா ஏப். 23ல் கொடிமரம் ஏற்றுவதுடன் துவங்கியது. அன்று இரவு அம்மன் பூசாரி வீட்டில் இருந்து மருதா நதிக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு அம்மன் அலங்கரித்து கண் திறக்கப்பட்டு கிடா வெட்ட ஊருக்கு அழைத்து வரப்பட்டார். மண்டகபடியில் எழுந்தருளிய அம்மன் கிராமத்தை சுற்றி வந்து கோவிலுக்கு சென்றார். ஏப். 24 காலையில் மாவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடம் ,பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அம்மன் மஞ்சள் நீராட்டுடன் முளைப்பாரி ஊர்வலத்துடன் பூஞ்சோலை சென்றடைந்தார்.

